Skip to main content

கரோனா அச்சம்; ஒன்றை வருடமாக வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்த குடும்பம் - ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்!

Published on 20/07/2021 | Edited on 20/07/2021

 

CORONA

 

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 35 வயதான விவசாயத் தொழிலாளி ஒருவர், கரோனா தொற்று முதன்முதலில் பரவியபோது, அத்தொற்றுக்கு பயந்து குடும்பத்தாருடன் வீட்டிற்குள் முடங்கியுள்ளார். தனது மனைவி, மகன், இரண்டு பெண் பிள்ளைகளோடு கதவை உள்பக்கமாகப் பூட்டிக்கொண்டு வீட்டிற்குள்ளேயே இருந்த அவரும், அவருடன் முடங்கிய குடும்பத்தினரும் வெளியே வராமலே இருந்துள்ளனர்.

 

விவசாயத் தொழிலாளியின் மகன் மட்டும் அவ்வப்போது வெளியே சென்று, ரேஷன் பொருட்களை வாங்கி வந்துள்ளார். கடந்த ஒன்றரை வருடமாக இதேநிலை நீடித்துள்ளது. இந்நிலையில் அந்த விவசாயத் தொழிலாளிக்கு முதல்வர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முதல்வர் வீடு கட்டும் திட்டம் தொடர்பான படிவத்தில் அந்த விவசாயத் தொழிலாளியிடம் கையெழுத்து வாங்க கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் அவரது வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

 

ஆனால் விவசாயத் தொழிலாளியும், அவரது குடும்பத்தினரும் கரோனா அச்சத்தால் வீட்டை வெளியே வர மறுத்துள்ளனர். இதனையடுத்து கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் அக்கம் பக்கத்தில் விசாரித்துள்ளனர். அப்போது அவர்கள் விவசாயத் தொழிலாளியும், அவரது குடும்பத்தினரும்  ஒன்றரை வருடமாக வெளியே வருவதில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

 

இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து போலீஸார், கதவை உடைத்து வீட்டிற்குள் சென்றனர். வீட்டிற்குள் விவசாயத் தொழிலாளியும், அவரது குடும்பத்தினரும் உடல்நிலை பாதிக்கப்பட்டு, உடல் மெலிந்து காணப்பட்டனர். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக அனுமதித்துள்ளனர். கரோனாவிற்கு பயந்து ஒன்றை வருடமாக ஒரு குடும்பம் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னை அருகே நிலநடுக்கம்!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Earthquake near Chennai

சென்னை அருகே லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே இன்று (14.03.2024) இரவு 8.43 மணியளவில் 3.9 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.  அதாவது திருப்பதியிலிருந்து கிழக்கு வடகிழக்கு திசையில் 58 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர் பேட்டை ஆகிய சுற்றுப் பகுதியில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

தடம்புரண்ட ரயில்; அலறிய பயணிகள்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
NN

ஆந்திராவில் இரவில் பயணிகள் ரயில் என்ஜின் தடம் புரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆந்திர மாநிலம் விஜயநகர மாவட்டம் கொத்த வலசு ரயில் நிலையப் பகுதியில் சென்று கொண்டிருந்த பயணிகள், திடீரென தடம் புரண்டது. அதன் காரணமாக ரயிலில் ஏற்பட்ட மிகப்பெரிய அளவிலான சத்தத்தால், ரயிலில் பயணம் செய்த பணிகள் அலறியடித்தனர்.

பின்னர் உடனடியாக அங்கு வந்த ரயில்வே போலீசார், ரயில் தடம் புரலக் காரணம் என்ன என்று விசாரித்த போது, ரயிலை ட்ராக் மாற்றிய தருணத்தில் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. லோகோபைலட் உடனடியாக சுதாரித்து ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இரவு நேரத்தில் ரயிலில் இருந்து இறங்கிய பயணிகள் அங்கிருந்து கிளம்பி மாற்று வழிகளில் பேருந்துகள், ஆட்டோக்களில் வீடு திரும்பும் நிலை ஏற்பட்டது. ரயில்வே போலீசார், இந்த விபத்து தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இரவில் ஏற்பட்ட இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.