இந்தியாவில் 62 ஆயிரத்தை கடந்தது கரோனா பாதிப்பு... மஹாராஷ்டிராவில் 779 பேர் உயிரிழப்பு!!! 

 Corona crosses 62 thousand in India, 779

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன.

இன்று (10/05/2020) காலை 08.00 மணி நிலவரப்படி இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை59,662-லிருந்து ஆக 62,939 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை1,981- லிருந்து2,109 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை17,847- லிருந்து19,358 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 20,228 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3,800 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 779 பேர் உயிரிழந்துள்ளனர்.

corona virus India
இதையும் படியுங்கள்
Subscribe