இந்தியாவில் கரோனாபரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனாஉறுதி செய்யப்பட்டு வருகிறது. மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில், கரோனாவின்பாதிப்பு இனி வரும் வாரங்களில் இன்னும் மோசமாக இருக்குமெனமத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு, "வரும் வாரங்களில், கரோனாவின் கோரத் தாண்டவம் மோசமாக இருக்கும். மக்களை அச்சப்படுத்துவதற்காகசொல்லவில்லை. ஆனால் இதுதான் நிதர்சனம். வரவிருக்கும் மிக மோசமான சூழலை எதிர்கொள்ள நாம் முழு அளவில் தயாராக இருக்க வேண்டும்" என கூறியுள்ளது.