அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு ஏற்கனவே, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் கரோனா தொற்று ஏற்பட்டு, பின்னர் குணமடைந்திருந்தார். இந்த நிலையில், தற்போது அவருக்கு மீண்டும் கரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக பிரியங்கா காந்தி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதற்கிடையே, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருக்கும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்திக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், தனது ராஜஸ்தான் பயணத்தை ஒத்திவைத்துள்ளார்.