Advertisment

கங்குலிக்கு கரோனா உறுதி

்ிபு

Advertisment

இந்தியாவில் தீவிரமாக இருந்த கரோனா தொற்று தற்போது குறைந்துவருகிறது. தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தொற்று எண்ணிக்கை சீராக இருந்துகொண்டே வருகிறது, கட்டுப்படுத்த முடியும் என்ற நிலையிலேயே தொற்று இருந்துவருகிறதே தவிர, முழுவதுமாக குறைக்க இயலவில்லை. இதற்கிடையே, இந்தியா முழுவதும் முக்கிய நபர்கள் கரோனா தொற்றால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுவருகிறார்கள்.

அந்த வகையில் பிசிசிஜ தலைவர் கங்குலிக்கு தற்போது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறிய அளவிலான காய்ச்சல் இருப்பதால் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நலமுடன் இருப்பதாகவும், பெரிய அளவிலான பாதிப்புகள் அவருக்கு இல்லை என்றும் மருத்துவமனை வட்டாரங்கள்தெரிவித்துள்ளன.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe