Advertisment

கரோனா சிகிச்சை மையத்தில் பயங்கர தீவிபத்து... 11 பேர் உயிரிழப்பு!!

corona center fire accident at vijayawada

ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் கரோனா வைரஸ் தொற்றுக்குசிகிச்சை அளித்து வந்த தனியார் மருத்துவமனை மையத்தில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 11 நோயாளிகள் உயிரிழந்தனர்.

Advertisment

விஜயவாடாவில் இயங்கிவரும் ரமேஷ் மருத்துவமனை, அங்குள்ள சுவர்ணா பேலஸ் என்ற ஹோட்டலை வாடகைக்கு எடுத்து அதில் கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது. 30 நோயாளிகளும், 10 மருத்துவமனை ஊழியர்களும் இந்த ஹோட்டலில் தங்கி வந்தனர். இந்த சூழலில், நேற்று இந்த ஹோட்டலின் முதல் தளத்தில் திடீரென தீ ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கிருந்த நோயாளிகளை வெளியேற்ற முயற்சிகள் நடைபெற்ற நிறத்தில் தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisment

அதற்குள் ஏழு பேர் உடல் கருகி உயிரிழந்தனர். காயமடைந்த மற்றவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மேலும் நான்கு பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. இந்நிலையில், இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.50 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் எனவும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்படும் எனவும் அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Andhra corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe