ADVERTISEMENT

காவலரின் மனிதநேயம்... மனம்நலம் பாதித்தவரின் விழிப்புணர்வு - நெகிழ வைத்த வீடியோ!

08:51 PM Apr 10, 2020 | suthakar@nakkh…

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 16 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 150-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 5000க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

ADVERTISEMENT


ADVERTISEMENT


இந்த ஊரடங்கில் பாதிக்கப்படுவர்களுக்கு அரசாங்கமும், தனி நபர்களும் உதவி செய்து வருகிறார்கள். இந்நிலையில் கேரளாவில் காவலர்கள் மூவர், மனம் நலம் பாதிக்கப்பட்டு சாலையில் அமர்ந்திருந்த ஒருவருக்கு உணவு கொடுக்க செல்கிறார்கள். அவர்களை பார்த்த அந்த நபர் அவர்களை அருகே வராதீர்கள் என எச்சரித்துவிட்டு, ஒரு வட்டம் போட்டுவிட்டு மீண்டும் போய் அமர்ந்து கொள்கிறார். காவலர்கள் அந்த இடத்தை விட்டு சென்ற உடன் அந்த உணவுப்பொட்டலத்தை பிரித்து அவர் சாப்பிடுகிறார். இந்த வீடியோ அனைத்தும் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. காவலரின் மனிதாபிமானத்தையும், மனம்நலம் பாதித்த நபரின் விழிப்புணர்வையும் அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT