ADVERTISEMENT

ஆந்திரத்தை அலறச் செய்யும் கரோனா... ஒரே நாளில் 10 ஆயிரத்தைக் கடந்த தொற்று!

09:56 PM Aug 05, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்தியாவை பொறுத்தமட்டில் மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவிக்கொண்டுள்ளது. ஆரம்பத்தில் குறைவான எண்ணிக்கையில் தொற்று இருந்துவந்த ஆந்திராவில், தற்போது மின்னல் வேகத்தில் கரோனா பரவி வருகின்றது. இன்று மட்டும் 10,128 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆந்திராவில் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,86,461 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 77 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1,681 ஆக அதிகரித்துள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT