Advertisment

மத்திய சிறைச்சாலையில் 41 கைதிகள், 3 வார்டன்களுக்கு கரோனா..! 

Corona for 41 inmates, 3 wardens in Central Jail ..!

புதுச்சேரியில் கரோனா நோய்த் தொற்றானது வேகமாகப்பரவி வருகின்றது. நேற்று 5,607 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 619 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. புதுச்சேரியில் இதுவரை 49,693 பேர் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி அரசு மற்றும் சுகாதாரத்துறை நோய்த் தொற்றைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

Advertisment

இந்நிலையில் புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் அமைந்துள்ள மத்திய சிறைச்சாலையில் ஆண்கள், பெண்கள் என 600-க்கும் மேற்பட்டோர் கைதிகளாக உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறைச் சாலைக்கு சென்று வந்த விசாரணைக் கைதி ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சிறை வளாகத்தில் உள்ள தண்டனைக் கைதிகள் மற்றும் வார்டுகளுக்கு நோய்த் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Advertisment

இதில் ஆயுள் தண்டனை கைதிகள் 41 பேருக்கும், சிறை வார்டன்கள் 3 பேருக்கும் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து தண்டனை கைதிகளுக்கு சிறை வளாகத்திலேயே தனி வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வார்டன்களுக்குதனியார் மருத்துவக் கல்லூரியில்சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Pondicherry corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe