Advertisment

ஜூன், ஜூலை மாதங்களில் கரோனா 4.0 - வெளியான அதிர்ச்சி தகவல்!

Advertisment

jkl

கரோனா நான்காவது அலை இன்னும் மூன்று மாதத்தில் தொடங்கும் என்று கரோனா நிபுணர் குழுவின் தலைவர் இக்பால் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கரோனா தொற்று கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் பரவ ஆரம்பித்த நிலையில் கடந்த 26 மாதங்களாக அது ஏற்படுத்திய தாக்கம் என்பது மிக அதிகம். எண்ணற்ற உயிரிழப்புகள், வேலை இழப்புகள், மாணவர்களின் கல்வி பாதிப்பு, தொழிற்சாலைகள் மூடல், சிறு குறு வணிக நிறுவனங்கள் நிரந்தரமாக மூடல் என அனைத்து தட்டு மக்களுக்கும் அதிகபட்ச பாதிப்பினை இந்த கரோனா பெருந்தொற்று ஏற்படுத்தியிருந்தது. முதல் அலையில் இந்திய மக்கள் தப்பி பிழைத்து வந்த நிலையில், இரண்டாம் அலை இந்தியாவில் ருத்ர தாண்டவம் ஆடியது. அதன் வீரியம் மிக அதிகமாக இருந்த நிலையில், நிபுணர்கள் கரோனா தடுப்பூசிகளை கண்டுபிடித்ததன் விளைவாக, பொதுமக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு மூன்றாவது அலை கரோனா பாதிப்புகள் கட்டுக்குள் வைக்கப்பட்டது.

இந்திய அளவில் தற்போது தினசரி கரோனா பாதிப்பு என்பது குறைந்த எண்ணிக்கையில் பதிவாகி வரும் சூழலில் தற்போது கரோனா குறித்த புதிய தகவல் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் அதாவது ஜூன், ஜூலை மாதங்களில் கரோனா நான்காவது அலை கண்டிப்பாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளதாக இந்திய கரோனா நிபுணர் குழு தலைவர் இக்பால் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தொற்று பரவல் முன் எப்போதும் இல்லாத அளவாக இருக்கும் என்றும், ஆனால் பாதிப்பு மிக குறைந்த அளவே இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Doctors India virus
இதையும் படியுங்கள்
Subscribe