Advertisment

இஸ்ரோ மையத்தில்  244 பேருக்கு கரோனா!

Corona for 244 people at ISRO Center!

நாடு முழுவதும் கரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் விதித்து வருகிறது. இந்நிலையில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ மையத்தில் 244 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ மையத்தில் பணிபுரியும் விஞ்ஞானிகள் மற்றும் ஊழியர்கள்244 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஊழியர்களும் விஞ்ஞானிகளும் பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பிய நிலையில் பலருக்கு கரோனா அறிகுறி தென்பட்டது. அதன் காரணமாகப் பரிசோதனை மேற்கொண்டதில் முதல்கட்டமாக நேற்று 92பேருக்கு கரோனாஉறுதிசெய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 152 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

Advertisment

மொத்தம் அங்கு 244 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால் இந்த மாத இறுதியில் செலுத்தப்பட இந்த ஜிபிஎஸ் தொழில்நுட்ப செயற்கைக்கோள் மற்றும் 'தகன்யான்' திட்டப் பணிகள் முடிய காலதாமதம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக விண்வெளித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

OMICRON Medical
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe