அண்மைக் காலமாகவே டிராஃபிக் காவலர்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் அடிக்கடி ரோட்டில் சண்டை போடுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளிவந்த படியே இருக்கிறது. அந்த வகையில் இன்னொரு சம்பவமாக, உத்தரப் பிரதேசத்தின் சித்தார்த் நகரில், குழந்தையுடன் சென்ற வாகன ஓட்டி ஒருவரை போலீஸ் அதிகாரி ஒருவர், வாகன ஓட்டி சரியான ஆவணங்களை சமர்ப்பிக்காததால், சரமாரியாக தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

Advertisment

தனது குழந்தையுடன் பைக்கில் வந்த அந்த நபர், ஒரு கட்டத்துக்கு மேல் போலீஸாரிடம் அடிவாங்க முடியாமல் மண்டியிட்டபடி, தன்னை விட்டுவிடுமாறும், தான் சென்று ஆவணங்களை எடுத்துவருமாறும் கெஞ்சுகிறார். ஆனாலும் விதிகளை மீறிய குற்றத்துக்காக, போலீஸ் அதிகாரி அந்த வாகன ஓட்டியை அடித்துத் துன்புறுத்தியுள்ள வீடியோ பெரும் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.