Advertisment

ஓட்டுக்கு பரிசாக கொடுத்த குக்கர் வெடித்து பெண் படுகாயம்

Cooker given as a gift to election explodes and woman is seriously injured

Advertisment

வாக்காளர்களுக்கு பரிசு பொருளாக கொடுக்கப்பட்ட குக்கர் வெடித்ததில் பெண் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கர்நாடகசட்டசபை தேர்தலில் போட்டியிடும்வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பல்வேறு பரிசு பொருட்களை வழங்கி வருகின்றனர். இப்பொழுதே பரிசுகள் கொடுத்து வாக்குகளை சேகரிக்கும் செயல்களில் பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பெங்களூரு சோமேஸ்வர காலனி பகுதியில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வீடு வீடாகச் சென்று குக்கர்களை கொடுத்துள்ளனர். அப்படி கொடுக்கப்பட்ட குக்கரில் ஒன்றை பெண் ஒருவர் பயன்படுத்திய போது திடீரென வெடித்துச் சிதறியது. இதில் அந்தப் பெண் படுகாயம் அடைந்தார். பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் இது குறித்து போலீசில் புகாரளித்த நிலையில், போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். தற்போது அந்த பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

elections karnataka
இதையும் படியுங்கள்
Subscribe