மணிப்பூர் மாநிலத்தின் சுராசந்த்பூர் மாவட்டத்தில், அசாம் ரைபிள்ஸ் பிரிவின் அதிகாரியைகுறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இந்த தாக்குதலின் போது அந்த அதிகாரியின் குடும்பத்தினரும் வாகனத்தில் இருந்துள்ளனர்.
பதுங்கியிருந்து தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில் சில இராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் எனவும்மேலும் சிலர் காயமடைந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. இதற்கிடையே தாக்குதல் நடந்த பகுதியில் பாதுகாப்பு படை வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் துப்பாக்கி சண்டை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மணிப்பூரை மையமாக கொண்ட மக்கள் விடுதலை இராணுவம் என்ற பயங்கரவாத அமைப்பு, இந்த தாக்குதலை நிகழ்த்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.