Advertisment

13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை; குற்றவாளிக்கு 83 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

The convict was sentenced to 83 years of rigorous imprisonment for A 13-year-old girl was misbehaviour

கேரளமாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் பிளைவுட் நிறுவனம் என்ற தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இஜிபுல் இஸ்லாம் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார்.

Advertisment

இந்த நிலையில், இவருக்கும் அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ள ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கணவரை பிரிந்து வாழும் அந்த பெண்ணுக்கு 13 வயதில் ஒரு மகள் இருந்துள்ளார். இதனையடுத்து, இஜிபுல் இஸ்லாம், அவர்கள் இருவரையும் அழைத்து ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

Advertisment

இந்நிலையில், அந்த பெண் கடைக்கு செல்வதற்காக வெளியே சென்றுள்ளார். அந்த சமயத்தில், வீட்டில் தனியாக இருந்த அந்த சிறுமியை இஜிபுல் இஸ்லாம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தகவல் அறிந்த போலீசார், இஜிபுல் இஸ்லாம் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பெரும்பாவூர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த வந்த நீதிமன்றம் நேற்று (01-01-24) அதிரடி தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில், இஜிபுல் இஸ்லாமுக்கு 83 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிப்பதாக உத்தரவிட்டது.

imprisonment highcourt Kerala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe