Controversy over kerala Congress MLA's statement on A law will be introduced to allow cooking and eating wild boar

காட்டுப்பன்றியை தேங்காய் எண்ணெய்யில் சமைக்கலாம் என்ற சட்டம் கொண்டு வரப்படும் என்று கேரளா காங்கிரஸ் எம்.எல்.ஏ பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கேரளா மாநிலம், கண்ணூர் மாவட்டத்தில், ஐக்கிய ஜனநாயக முன்னணியின் மலையோர ஜாதா போராட்டம் தொடர்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், பேராவூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ சன்னி ஜோசப் கலந்து கொண்டு பேசினார். அதில் அவர், “கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு வந்தால், காட்டுப்பன்றி இறைச்சியை உண்பதற்கு அனுமதிக்கும் சட்டம் கொண்டுவரப்படும்.

Advertisment

தற்போதைய சட்டங்களின் கீழ், காட்டுப்பன்றியைச் சுட உரிமம் பெற்ற துப்பாக்கி தேவை. ஆனால் கொட்டியூர் பஞ்சாயத்து முழுவதும், ஒருவரிடம் மட்டுமே உரிமம் பெற்ற துப்பாக்கி உள்ளது. அதனால், விவசாயிகள் தங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாக்க முடியும்?. இப்போதைக்கு, ஒரு காட்டுப்பன்றியை சுட்டுக் கொன்றால், அதை மண்ணெண்ணெய் ஊற்றி புதைக்க வேண்டும். ஆனால், என் கருத்துப்படி, அதை தேங்காய் எண்ணெயில் சமைக்க வேண்டும். நான் இதை வெளிப்படையாகச் சொல்கிறேன்” என்று கூறினார்.

கேரளாவின் மலைப் பகுதிகளில் வன விலங்குகளின் தாக்குதல் அதிகரித்து வரும் சூழலில் காங்கிரஸ் எம்.எல்.ஏவின் கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment