ADVERTISEMENT

காந்தி தற்செயலான விபத்தால் இறந்தாரா..? சர்ச்சைக்குள்ளாகும் மாநில அரசின் மாணவர் கையேடு...

12:48 PM Nov 16, 2019 | kirubahar@nakk…

மகாத்மா காந்தி தற்செயலான ஒரு விபத்தில் இறந்தார் என பொருள்படும் வகையில் புத்தகத்தில் வெளியிட்டுள்ளதாக ஒடிசா மாநில அரசு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஒடிசா மாநில அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கையேடு ஒன்று வழங்கப்பட்டது. அதில், "மஹாத்மா காந்தி அடுத்தடுத்து நடந்த சில தொடர் தற்செயல் சம்பவங்களால் ஜனவரி 30 ஆம் தேதி உயிரிழந்தார்" என தெரிவிக்கப்பட்டிருந்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து இந்த விவகாரத்தில் முதலமைச்சர் நவீன் பட்நாயக் மன்னிப்பு கேட்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காந்தியின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்த சிறிய கையேடு தற்போது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT