Advertisment

நாடாளுமன்றத்தில் சர்ச்சை பேச்சு; “மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” - செந்தில் குமார் எம்.பி

Controversial speech in Parliament and Senthil Kumar MP says I beg your pardon

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாக தேர்தல்கள் நடந்து முடிந்தது. தொடர்ந்து தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகி இருந்தது. இதனையடுத்து, மிசோரத்தை தவிர்த்து மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 3ஆம் தேதி நடைபெற்றது.

Advertisment

அதில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுஆட்சியை பிடித்துள்ளது. மேலும், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று முதன் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. அதே போல், மிசோரமில் ஸோரம் மக்கள் இயக்கம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.

Advertisment

இந்த நிலையில், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர், கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரானது வருகிற டிசம்பர் 22ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த விவாதத்தில் ஆளும் பா.ஜ.க எம்.பி.க்களும், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் காரசாரமாக விவாதித்து வருகின்றனர். இதனையடுத்து, நேற்று (05-12-23) இரண்டாவது நாள்நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது.

இதில் மக்களவையில் பேசிய தி.மு.க எம்.பி. செந்தில் குமார், “இந்தி பிரதானமாக பேசப்படும் மாநிலங்களில் தான் பா.ஜ.க பலமாக உள்ளது. இந்த மாநிலங்களை நாங்கள் பொதுவான கெள்மூத்ரா என்று தான் சொல்வோம். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க.வால் ஆட்சியை கைப்பற்ற முடியாது” என்று பேசினார். திமுக எம்.பி. செந்தில் குமார், பா.ஜ.க வென்ற மாநிலங்களைக் குறிப்பிட்டு பேசிய போது பயன்படுத்திய வார்த்தை பெரும் சர்ச்சையை கிளப்பியது.

செந்தில் குமார் பேச்சுக்கு பா.ஜ.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே போல், திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியும் செந்தில் குமார் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், செந்தில் குமார் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ.கவினர் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், செந்தில் குமார் அவர் பயன்படுத்திய வார்த்தைக்கு மன்னிப்புகோரியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து கூறிய நான், தவறான பொருள் அளிக்கும் வகையில் ஒரு வார்த்தையை பயன்படுத்திவிட்டேன். நான் எந்த உள்நோக்கத்துடனும் அந்த சொல்லை பயன்படுத்தவில்லை. அது தவறான பொருள் தருகிறது என்பதால் நான் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

controversy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe