Controversial speech about the Prophet, the case against Nupur Sharma!

Advertisment

நபிகள் நாயகம் குறித்த சர்ச்சைப் பேச்சு தொடர்பாக, நுபுர் சர்மாவுக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படும் என மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின்விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பா.ஜ.க.வைச் சேர்ந்த நுபுர் சர்மா நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தெரிகிறது. இது தொடர்பான, புகாரின் பேரில் மும்பை காவல்துறை, நுபுர் சர்மா மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருக்கிறது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மும்பை காவல்துறை ஆணையர் சஞ்சய் பாண்டே, நுபுர் சர்மாவுக்கு விரைவில் சம்மன் அனுப்பப்பட்டு, அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்று கூறினார்.முன்னதாக, நுபுர் சர்மாவைக் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து பா.ஜ.க. உத்தரவிட்டிருந்ததுஎன்பது குறிப்பிடத்தக்கது.