Advertisment

பெண்கள் தொடர்பாக சர்ச்சை கேள்வி... எதிர்ப்புக்கு பணிந்த சிபிஎஸ்சி!

yy

சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற சிபிஎஸ்சி மாதத்தேர்வில் ஆங்கில பாடத்தில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று இந்திய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் நடந்துகொள்ளும் முறை என்று கொடுக்கப்பட்டிருந்த அந்தக் கேள்வியில் பல்வேறு கருத்துகள் பெண்களுக்கு எதிராக நேரடியாக இருந்தது. அந்த வினாத்தாளில் குறிப்பாக, தற்போது கணவர்களுக்குப் பெண்கள் கீழ்ப்படிவதை நிறுத்திவிட்டார்கள். அதனால், வேலைக்காரர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஒழுக்கமின்மை அதிகரித்துவிட்டது. பெண் விடுதலை குழந்தைகளின் ஒழுக்கமின்மைக்கு முதல் காரணமாக உள்ளது. பெண் விடுதலை தற்போதைய சமூகப் பிரச்சனைக்கு காரணமாக அமைந்துள்ளது என கேள்வியாககொடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக 'எழுத்தாளர் ஒரு பேரினவாத நபர்' என்று ஒரு விடையும், 'எழுத்தாளர் வாழ்க்கையை மிக எளிதாகப் பார்க்கிறார்' என இரண்டாவது விடையும்கொடுக்கப்பட்டிருந்தது.

Advertisment

தற்போது இந்த விவகாரம் இந்தியா முழுவதும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பெரும்பாலான அரசியல் கட்சியினரும், பெண்கள் நல அமைப்புகளும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துவருகிறார்கள். சில அமைப்புகள் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு தொடரப்படும் என்று கூறியிருந்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மன்னிப்பு கேட்டுள்ள சிபிஎஸ்சி நிர்வாகம், தவறு நடந்துவிட்டதாகவும், இந்த வினாவுக்கு அனைவருக்கும் மதிப்பெண் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

Advertisment

women rights cbsc
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe