மலையாள பத்திரிகையான கிருகலஷ்மியின் மார்ச் மாத அட்டைப் படம் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. அப்படி அதில் என்ன இருந்தது என்கிறீர்களா?

Advertisment

பெண்கள் பொது இடங்களில் தயக்கமில்லாமல் தாய்ப்பாலூட்டுவதை ஊக்குவிக்கும் விதமாக துபாயைச் சேர்ந்த ஜிலு ஜோசப் எனும் மாடல் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுவது போன்ற அட்டைப்படம் இடம்பெற்றிருந்தது.

kerala

கூடவே கேரள தாய்மார்கள் சொல்வதுபோல், உற்றுப் பார்ப்பதை நிறுத்துங்கள். நாங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டவேண்டும் என்ற வாசகமும் கீழே இடம்பெற்றிருந்தது.

Advertisment

அட்டைக்கு ஒரே நேரத்தில் வரவேற்பும் எதிர்ப்பும் வந்திருக்கிறது. வரவேற்பவர்கள், இதிலென்ன தப்பு நல்ல விஷயம்தானே என்கிறார்கள். யுனிசெஃப் இந்தியா அமைப்பு, நடிகை ஜெலினா ஜெட்லி உள்ளிட்டவர்கள் பாராட்டி வரவேற்றிருக்கிறார்கள். பெண்களின் மார்பகத்தை கவர்ச்சிப் பொருளாக பார்ப்பதை மாற்றிக்கொள்ளவேண்டும் என்கிறார்கள் ஆதரவுதெரிப்பவர்கள்.

அதேசமயம் எதிர்ப்பவர்கள், இது பத்திரிகை விற்பனைக்கான மலிவான உத்தி. பால் கொடுப்பதில் தவறில்லை. அதை சேலையால் மூடிக்கொண்டு செய்திருக்கலாம். ஒரு மாடலுக்குப் பதில்… அதுவும் தாய்மையை அடையாத மாடலுக்குப் பதில் நிஜ தாயையே பயன்படுத்தியிருக்கலாம். இப்படி திறந்துபோட்டு பாலூட்டுவது கலாச்சாரத்துக்கு எதிரானது என பலதரப்பட்ட குரல்கள் எழுந்திருக்கின்றன.

கேரளத்தைச் சேர்ந்த வினோத் மாத்யூ எனும் வழக்கறிஞர் கிருகலட்சுமி அட்டைப்படத்துக்கு எதிராக கொல்லம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.