Advertisment

தொடர்ந்து பிரச்சாரம்...நவ்ஜோத் சிங் சித்துவின் குரல்வளையில் பாதிப்பால் பேச முடியாது! 

இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் 6 கட்டங்கள் நடந்து முடிந்த நிலையில் வரும் 19-ஆம் தேதி இறுதி கட்டமாக 7-ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளராக நவ்ஜோத் சிங் சித்து தற்போது பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து ஏராளமான பேரணி மற்றும் பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டார்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

siddhu

கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவரது குரல்வளை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சித்து தரப்பில் கூறுகையில் தொடர் பிரசாரம் காரணமாக சித்துவின் குரல்வளை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு வாரத்துக்கு பேசவே கூடாது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவரது குரலில் ரத்த போக்கு ஏற்படும் அளவுக்கு பாதிப்புள்ளது. அவரது குரல்வளை மீது மருந்து போடப்பட்டுள்ளது. ஸ்டீராய்டு மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளன.இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் சிகிச்சை முடிந்து பிரச்சாரத்துக்கு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

election campaign navjot singh congress cricket players. indian cricket
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe