container lorry incedent in maharastra

Advertisment

சாலையில் கண்டெய்னர் லாரி ஒன்று தாறுமாறாக ஓடி விபத்தை ஏற்படுத்தியசம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம்துலே மாவட்டத்தில் மும்பை - ஆக்ரா நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி ஒன்று தாறுமாறாக ஓடி சாலையில் சென்று கொண்டிருந்த 4 வாகனங்கள் மீது மோதியது. மேலும் சாலையோரம் உள்ள ஹோட்டலில் புகுந்தது. இந்த விபத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த விபத்து குறித்து போலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த விபத்தில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இச்சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.