Published on 12/02/2020 | Edited on 12/02/2020
கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவாக நுகர்வோர் பணவீக்கம் 7.59% ஆக அதிகரித்துள்ளதாக மத்திய புள்ளியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்தில் 7.35% ஆக இருந்த பண வீக்கம் 2020 ஆம் ஆண்டு ஜனவரியில் 7.59% ஆக அதிகரித்துள்ளது. காய்கறி, பழங்கள், பருப்பு வகைகள், எரிபொருள் விலை உயர்வு காரணமாக பண வீக்கம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல் கடந்த டிசம்பர் மாதத்தில் 1.8% ஆக இருந்த தொழிற்சாலை உற்பத்தி வளர்ச்சி நடப்பாண்டு ஜனவரியில் -0.3 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.