Advertisment

23 ஆயிரம் ரூபாய் லேப்டாப்பிற்கு 45 ஆயிரம்  நஷ்டஈடு... அமேசானுக்கு செக் வைத்த நுகர்வோர் ஆணையம்! 

amazon

ஒடிசாவின் சட்டகல்லூரி மாணவர்ஒருவர் கடந்த 2014ஆம் ஆண்டு பிரபலஇணையதள விற்பனைத் தளமானஅமேசானில் லேப்டாப் ஒன்றை ஆர்டர்செய்துள்ளார். 23,499 ரூபாய் விலைகொண்ட அந்த லேப்டாப், சலுகையில் ரூ.190 ரூபாய் விலையில்கிடைக்கும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகையில் ஈர்க்கப்பட்ட அவர், அந்த லேப்டாப்பைஆர்டர் செய்துள்ளார்.

Advertisment

சட்டக் கல்லூரி மாணவர்ஆர்டர் செய்தசிறிதுநேரத்திலேயே, அவரைதொடர்புகொண்ட அமேசான் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைமையம், விலை மந்தநிலை காரணமாகஅவரது ஆர்டர்ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே அவருக்கு லேப்டாப்பிற்கான உடனடி தேவை இருந்ததால், ஆர்டர்ரத்து செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர் அமேசான்நிறுவனத்துக்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பியுள்ளார். இதற்குஅந்த நிறுவனம் பதிலளிக்கவில்லை.

Advertisment

இதனைத் தொடர்ந்து அந்த மாணவர்மாவட்ட நுகர்வோர் மன்றத்தை அணுகியுள்ளார். இந்த வழக்கை விசாரித்தமாவட்ட நுகர்வோர் மன்றம், மாணவருக்கு12 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இந்த தீர்ப்பினால்ஏமாற்றமடைந்த சட்டக் கல்லூரி மாணவர், மாநிலநுகர்வோர் ஆணையத்திடம் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கினைவிசாரித்தஒடிசா மாநில நுகர்வோர் ஆணையம், நஷ்டஈடாக40 ஆயிரமும், வழக்கு செலவிற்காக 5 ஆயிரமும்வழங்க உத்தரவிட்டுள்ளது.

CONSUMER COURT amazon
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe