Skip to main content

கட்டடத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் 

 

construction labourer issue in puducherry

 

புதுச்சேரியில் கட்டடத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நல வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

புதுச்சேரியில் உள்ள கட்டடத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் கடந்த  ஒரு வருட காலமாக புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை. வாரியத்தில் நிரந்தர அதிகாரி இல்லாததால் தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாரியத்தில் நிரந்தரமான அதிகாரியை உடனடியாக நியமித்திட வேண்டும். இத்துறையின் ஆணையர் பதவியை உடனடியாக நிரப்ப வேண்டும். புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்க வேண்டும்.

 

நலத்திட்டங்கள் தாமதமின்றி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி கட்டடத் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கிழக்கு கடற்கரைச் சாலையிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு தட்டாஞ்சாவடியில் உள்ள கட்டடத் தொழிலாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தியும், புதுச்சேரி முதலமைச்சர், துறையின் அமைச்சர், மற்றும் துறை செயலருக்கு எதிராகவும் கண்டன முழக்கங்கள் எழுப்பினர். 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !