Skip to main content

சரிதா நாயர் கொடுத்த புகாரில் சதி! - சி.பி.ஐ. அறிக்கையில் தகவல்

Published on 12/09/2023 | Edited on 12/09/2023

 

Conspiracy in Sarita Nair's complaint! CBI Information in the report

 

உம்மன் சாண்டி முதல்வராக இருந்த 2011-2016 காலகட்டங்களில், சோலார் எரிசக்தி நிறுவனம் மோசடி விவகாரம் அவருக்கு பெரும் நெருக்கடியாக இருந்தது. அந்தச் சமயத்தில் தான் சோலார் பேனல் மோசடி வழக்கில் சிக்கிய சரிதா நாயர், அன்றைய முதல்வர் உம்மன் சாண்டி உள்ளிட்டோர் மீது பாலியல் புகார்கள் கூறி பரபரப்பைக் கிளப்பினார். இந்த வழக்கில் தற்போது முன்னாள் முதல்வருக்கு சாதகமாக தீர்ப்பு வெளியாகியுள்ளது.

 

கேரளா, செங்கனூர் பகுதியைச் சேர்ந்த சரிதா நாயர் என்பவர், சோலார் பேனல் ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்டவர். இவர் 2013 ஆம் ஆண்டில், ஸ்ரீதா எஸ் நாயர் மற்றும் பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொச்சியில் நடத்தி வந்த 'டீம் சோலார் ரினியூவபில் எனர்ஜி சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்' மீது தொடுக்கப்பட்ட ஊழல் புகாரின் பேரில் கைதாகினர். இவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் என்.ஆர்.ஐ.களிடமிருந்து முதலீடுகளைச் சேகரித்து, காற்றாலைத் திட்டங்கள் மற்றும் சோலார் வயல்களில் அவர்களைப் பங்குதாரர்களாக மாற்றுவதாகக் கூறியுள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, சாண்டி உள்ளிட்ட உயர்மட்ட அரசியல்வாதிகளின் பெயர்களையும் முதல்வர் அலுவலகத்தின் போலி லெட்டர்ஹெட்களை கொண்டு முதலீட்டாளர்களை நம்ப வைத்துள்ளனர். இந்த இருவர்.

 

மேலும், சரிதா 8 வருடங்கள் முன்பு முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மீது வன்கொடுமை புகாரைத் தெரிவித்தார். உம்மன் சாண்டி முதல்வராகப் பதவி வகித்த போது, அவரின் அரசு இல்லத்தில் வைத்து இச்சம்பவம் நடந்தது என சரிதா கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர், சரிதா இந்த விவகாரத்தை புகாராக முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து மனுவாக சமர்ப்பித்தார். இதனைத் தொடர்ந்து, சிபிஐ விசாரணைக்கு பினராயி விஜயன் இந்த வழக்கை மாற்றினார். பின்னர், விசாரணையைத் தொடங்கியது சி.பி.ஐ. குழு. தொடர்ந்து, சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படும் திருவனந்தபுரம் உம்மன் சாண்டியின் அரசு இல்லத்தில், சிபிஐ விசாரணை நடத்தினர். அங்குள்ள, காவலர்கள் முதல் அனைவரிடமும் விசாரிக்கப்பட்டது.  

 

தற்போது வெளியான எர்ணாகுளம் சி.பி.ஐ.  நீதிமன்ற அறிக்கை மீண்டும் கேரளாவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்கல் செய்த அறிக்கையில், சரிதா நாயரின் புகார் விவகாரத்தில் சதி நடந்துள்ளது எனத் தெரியவந்துள்ளது. இந்த அறிக்கையைத் தொடர்ந்து கேரளா காங்கிரஸ் கட்சியினர், முதல்வர் பினராயி விஜயன் உள்பட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்தவர்களும் இந்தப் புகார் விவகாரத்தில் சாதகமாக செயல்பட்டதாக விமர்சித்து வருகின்றனர். இந்த விவகாரம் நேற்று நடந்த கேரள சட்டமன்றத்திலும் அனல் பறக்கும் விவாதங்களைக் கிளப்பியது.

 

 

சார்ந்த செய்திகள்