Advertisment

தாஜ்மகாலை ஷாஜகான் கட்டவில்லையா? - ஆய்வு செய்ய பரிசீலனை

Consideration to study whether Taj Mahal was built by Shahjahan or not

தாஜ்மகாலை ஷாஜகான் கட்டினாரா இல்லையா என்பது குறித்து ஆய்வு செய்யப்பரிசீலனை செய்வதாகத்தொல்லியல் துறை தகவல் தெரிவித்துள்ளது.

Advertisment

தாஜ்மகால் முகலாய மன்னர் ஷாஜகானால் கட்டப்படவில்லை, இந்து மன்னர் ராஜா மான்சிங் தான் கட்டினார் என்று இந்து சேனா அமைப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத்தாக்கல் செய்தது. மேலும் அந்த மனுவில் ராஜா மான்சிங் அரண்மனையைத்தான் ஷாஜகான் சீரமைத்து தாஜ்மகாலாக மாற்றினார் என்பதை ஆய்வு செய்து வரலாற்றில் சேர்க்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Advertisment

இந்த நிலையில், இன்று இந்த மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தாஜ்மகாலைக்கட்டியது யார் என்பது குறித்துஆய்வு செய்யப் பரிசீலனை செய்வதாகத்தொல்லியல் துறை தகவல் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையேற்றுநீதிமன்றம் இந்து சேனா அமைப்பு தொடர்ந்த வழக்கை முடித்து வைத்துள்ளது.

tajmahal
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe