Advertisment

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் தேர்வு குறித்து காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்...

Congress Working Committee resolution to elect its president

Advertisment

சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் தலைமை தேர்வு எப்போது நடைபெறும் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் காணொளிக்காட்சி வாயிலாக இன்று (22.01.2021) நடைபெற்றது. சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி, குலாம் நபி ஆசாத், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் எதிர்கால திட்டங்கள் மற்றும் விவசாயச் சட்டங்கள் உள்ளிட்ட பாஜகவின் ஆட்சி, பட்ஜெட் கூட்டத்தொடர் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, "வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் 50 நாட்களுக்கும் மேலாகப் போராடி வருகிறார்கள். ஆனால், போராட்டம் குறித்து எந்தவிதமான உணர்ச்சியும் இல்லாமல் அகங்காரத்துடன் நடந்துகொள்ளும் மத்திய அரசின் செயல் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

Advertisment

வேளாண் சட்டங்கள் வெறுப்புடனும், அவசர அவசரமாகவும் தயாரிக்கப்பட்டுள்ளதுஎன்பது தெளிவாகத் தெரிகிறது. அதனால்தான் நாடாளுமன்றத்தில் இந்த மசோதா குறித்து விவாதிக்கவும், அதன் தாக்கங்கள், பாதிப்புகள் குறித்து விரிவாக ஆலோசிக்கவும், பேசவும், உள்நோக்கத்துடன் மத்திய அரசு அனுமதிக்கவில்லை.

வேளாண் சட்டங்கள் குறித்துத் தொடக்கத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டில் தெளிவாக இருந்து வருகிறது. வேளாண் சட்டங்கள் உணவுப் பாதுகாப்பை அழித்துவிடும், குறைந்தபட்ச ஆதார விலை, பொதுக்கொள்முதல், ரேஷன் முறை ஆகிய 3 தூண்களையும் இந்தச் சட்டம் அழித்துவிடும் என்பதால், நாம் தொடக்கத்தில் இருந்தே புறக்கணித்தோம்.

வாட்ஸப்பில் அர்னாப் கோஸ்வாமிக்கும், பார்க் முன்னாள் தலைவருக்குமான உரையாடல் குறித்து சமீபத்தில் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி வெளியிட்ட அறிக்கையைப் பார்த்தேன். எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. நாட்டின் தேசப் பாதுகாப்பு எவ்வாறெல்லாம் சமரசம் செய்யப்படுகிறது என்பது வருத்தத்திற்குரியது. இந்த விவகாரம் வெளியான பின்பும், மத்திய அரசு தனக்கு ஏதும் தெரியாததுபோல் அமைதியாக இருந்து வருகிறது. மற்றவர்களின் தேச பக்திக்கும், தேசியவாதத்துக்கும் சான்று அளித்தவர்கள் தற்போது மக்கள் முன் கையும் களவுமாக மாட்டியிருக்கிறார்கள்.

பொதுச் செலவினங்களைக் கவனமாக முன்னுரிமை அளித்துச் செலவிட வேண்டிய சூழல் இருக்கும்போது, மத்திய அரசு தன்னுடைய பெருமையையும், தோற்றத்தையும் உயர்த்தும் வகையான திட்டங்களுக்கு மிகப்பெரிய அளவில் செலவிடுவது வேதனையாக இருக்கிறது" எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து, இந்தக் கூட்டத்தில் நடந்தவை குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், ஜூன் மாதத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் எனச் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Rahul gandhi sonia gandhi congress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe