Advertisment

ஆகஸ்ட் 28- ஆம் தேதி காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

Congress working committee meeting on August 28!

வரும் ஆகஸ்ட் 28- ஆம் தேதி அன்று மாலை 03.30 மணிக்குகாங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெறும் என்று அக்கட்சித் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறவுள்ள, செயற்குழு கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ப.சிதம்பரம், கே.சி.வேணுகோபால், அசோக் கெலாட், கட்சியின் மூத்த நிர்வாகிகள், கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

Advertisment

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரைத் தேர்வு செய்வது தொடர்பாகவும், அத்தேர்தலுக்கான அட்டவணை குறித்தும் இறுதி முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

வரும் செப்டம்பர் 20- ஆம் தேதிக்குள் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரைத் தேர்வு செய்ய ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைவர் பதவியை மீண்டும் ஏற்க ராகுல் காந்தி மறுப்பு தெரிவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், பிரியங்கா காந்தி, ப.சிதம்பரம், அசோக் கெலாட், முகுல் வாஸ்னிக், உள்ளிட்டோர்களின் பெயர்களும் தலைவர் பதவியின் பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

congress Delhi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe