Advertisment

காங்கிரஸ் செயற்குழு கூட்டம் இன்று கூடுகிறது... தலைவர் பதவி குறித்து முக்கிய ஆலோசனை !

RAHUL - SONIA

காங்கிரஸ் கட்சியின்செயற்குழு கூட்டம் இன்று (16.10.2021) நடைபெறவுள்ளது. இந்த செயற்குழு கூட்டத்தில் அடுத்து நடைபெற இருக்கும் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல், கட்சிக்குள்ளானதேர்தல் ஆகியவை விவாதிக்கப்பட இருக்கிறது.

Advertisment

அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில் சிபல், "காங்கிரசில் இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் இல்லை. யார் முடிவுகளை எடுக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியவில்லை" என தெரிவித்ததோடு, "மக்கள் ஏன் காங்கிரஸை வெளியேற்றுகிறார்கள்? ஒருவேளை அது நம் தவறா என்று பார்க்க வேண்டும். நாம் உடனடியாக ஒரு செயற்குழு கூட்டத்தைக் கூட்ட வேண்டும். குறைந்தபட்சம் ஒரு விவாதமாவது நடைபெறும்" என காங்கிரஸ் தலைமைக்கு கோரிக்கை விடுத்தார்.

Advertisment

அதேபோல் இன்னொரு மூத்த தலைவரானகுலாம் நபி ஆசாத், காங்கிரஸ் செயற்குழுவை உடனடியாக கூட்ட வேண்டும் என காங்கிரஸ் தலைமைக்கு கடிதம் எழுதினார். இதனையடுத்து இன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கூட இருக்கிறது.

alt="udanpirape " data-align="center" data-entity-type="file" data-entity-uuid="9d010e36-bb0b-4780-916b-361ab0093e81" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/udanpirappe-article-inside-500x300_127.jpg" />

இன்று கூடவுள்ள இந்த செயற்குழு கூட்டத்தில், காங்கிரஸ் தலைவருக்கானதேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குப் பொறுப்பேற்று ராகுல் காந்தி, அக்கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகியதையடுத்து, சோனியா காந்தி காங்கிரஸின் இடைக்கால தலைவராக பொறுப்பு வகித்துவருவதுகுறிப்பிடத்தக்கது.

sonia gandhi Rahul gandhi congress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe