இமாச்சலப்பிரதேசத்தின் சிம்லா மாநகராட்சிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை தேர்தல் நடைபெற்றது. சிம்லா மாநகராட்சியில் மொத்தம் 34 வார்டுகள் உள்ள நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் 59 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
இந்நிலையில் இன்று பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 5 சுற்றுகளாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில்ஆளும் காங்கிரஸ் கட்சியானது 24 இடங்களிலும், பா.ஜ.க. 9 இடங்களிலும், சி.பி.ஐ.(எம்.) 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக பாஜகவிடம் இருந்த சிம்லா மாநகராட்சியை இந்தத்தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.