ADVERTISEMENT

குளிர்கால கூட்டத்தொடர்: சோனியா காந்தி தலைமையில் வியூகம் அமைத்த காங்கிரஸ்! 

11:30 AM Nov 26, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்திய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், வரும் 29ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுவருகிறது. இதுதொடர்பாக நேற்று (25.11.2021) டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில், பாராளுமன்ற வியூகக் குழு கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், பணவீக்கம், பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, சீன ஆக்கிரமிப்பு மற்றும் ஜம்மு & காஷ்மீர் விவகாரங்கள் ஆகியவற்றை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது எழுப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. மேலும், கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே விவசாயிகள் பிரச்சனையையும், குறைந்தபட்ச ஆதார விலை விவகாரத்தையும் எழுப்ப முடிவு செய்துள்ள காங்கிரஸ், அதேநாளில் லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் எழுப்ப முடிவெடுத்துள்ளது.

அதேபோல் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கவும் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, "மற்ற கட்சிகளோடு ஒருங்கிணைந்து செயல்படுவோம். திரிணாமூல் மற்றும் பிற கட்சிகள் ஒருங்கிணைந்த அணுகுமுறையைக் கொண்டிருக்க வேண்டும். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை நாங்கள் விரும்புகிறோம்" என கூறியுள்ளார்.

மேலும் மல்லிகார்ஜுன கார்கே, தாங்கள் எழுப்பப்போகும் விவகாரங்களில், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஒரு பகுதியாக பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுப்போம் எனவும் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT