Advertisment

"காங்கிரஸ் சாதியவாதத்தை பரப்புகிறது"- பிரதமர் மோடி...

kk

Advertisment

பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தனிப்பட்ட முறையில் தொடர்ந்து விமர்சித்து வருவது சர்ச்சையை கிளப்பியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சி.பி. ஜோஷி ராஜஸ்தானில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டபோது, ”பிரதமர் மோடி, உமா பார்த்தி ஆகியோருக்கு ஹிந்து மதத்தை பற்றி என்ன தெரியும். அவர்கள் என்ன பிராமணர்களா” என்றார். இதற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்தார். இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் ராஜ் பாப்பர், ”பிரதமர் மோடியின் தாயாரின் வயது போன்று டாலருக்கு நிகராக இந்தியா ரூபாயின் மதிப்பு இருக்கிறது” என்றார். இதற்கு மோடியும் பதிலடி கொடுத்தார். மேலும் ஒரு காங்கிரஸ் மூத்த தலைவர், ”நீங்கள் பிரதமர் ஆவதற்கு முன்பு உங்களை யாருக்கு தெரியும்? இப்போதும் கூட உங்கள் தந்தையின் பெயர் கூட யாருக்கும் தெரியாது” என்று விமர்சித்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பிரதமர் மோடி, ”எதிர் கட்சியை சேர்ந்தவர்கள் பிரதமரின் சாதி என்ன என்று கேட்கிறார்கள். நான் அமெரிக்க ஜனாதிபதியை பார்க்கும்போது, அவர் என்னுடைய சாதியை பற்றி கேட்கிறாரா? இந்திய பிரதமர் நாட்டை பிரதிபலிக்கிறார். காங்கிரஸ் சாதியவாதத்தை தூண்டுகிறது” என்று பிரதமர் மோடியை பற்றி விமர்சித்த மூத்த காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். மேலும், ”அவர்களுக்கு நான் செய்த நல்லதுகளை பேச வாய் வரவில்லை, அதனால்தான் அரசியல் அல்லாமல் என்னுடைய குடும்பத்தை பற்றி எல்லாம் பேசுகிறார்கள்” என்றார்.

congress Narendra Modi Rajasthan
இதையும் படியுங்கள்
Subscribe