Skip to main content

உம்மன் சாண்டிக்கு கரோனா பாதிப்பு!

Published on 08/04/2021 | Edited on 08/04/2021

 

CONGRESS SENIOR LEADER AND KERALA FORMER CM OOMMEN CHANDY COVID POSITIVE

 

தமிழகம், கேரளா, புதுச்சேரி, பஞ்சாப், ஆந்திரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைள், கரோனா தடுப்பூசி போடும் பணிகளை அந்தந்த மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. தற்போது திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கரோனாவால் அதிகளவில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

 

அதன் தொடர்ச்சியாக, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், கோழிக்கோடுவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில், கேரள மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டிக்கு கரோனா மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவர் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

 

கேரளாவில் மாநில முதல்வருக்கும், முன்னாள் முதல்வருக்கும் கரோனா உறுதியாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது, அம்மாநில மக்களை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுப்பள்ளியில் மீண்டும் வாகை சூடிய காங்கிரஸ்

Published on 08/09/2023 | Edited on 08/09/2023

 

kerala puthuppally constituency by election Congress took oath again

 

கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி (வயது 80) உடல் நலக்குறைவு காரணமாகப் பெங்களூருவில் கடந்த ஜூலை 18 ஆம் தேதி அதிகாலை 04.25 மணியளவில் காலமானார். கேரள மாநில மூத்த காங்கிரஸ் தலைவரான உம்மன் சாண்டி கடந்த 2004 முதல் 2006 ஆம் ஆண்டு வரையிலும், 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை என இருமுறை கேரள மாநில முதலமைச்சராகப் பதவி வகித்தவர். கேரளாவில் உள்ள கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளி சட்டமன்றத் தொகுதியில் 1970 முதல் 2021 வரை காங்கிரஸ் கட்சி சார்பாக 12 முறை வெற்றி பெற்றுத் தொடர்ந்து 52 ஆண்டுகளுக்கும் மேலாகச் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். இத்தனை ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த இந்தியாவின் ஒரே அரசியல் தலைவர் கேரளாவின் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி.

 

உம்மன் சாண்டியின் மறைவைத் தொடர்ந்து அவர் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து வந்த புதுப்பள்ளி சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதே சமயம் நாடு முழுவதும் உள்ள 6 மாநிலங்களில் காலியாக உள்ள புதுப்பள்ளி தொகுதி உட்பட 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கு கடந்த 5 ஆம் தேதி இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

 

புதுப்பள்ளி இடைத்தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சாண்டி உம்மன் முன்னிலை வகித்து வந்தார். இந்நிலையில் புதுப்பள்ளி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சாண்டி உம்மன் 78 ஆயிரத்து 98 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 41 ஆயிரத்து 644 வாக்குகளுடன் சிபிஎம் கட்சி  2 ஆம் இடமும், பாஜக 6,447 வாக்குகளுடன் 3 ஆம் இடமும் பிடித்தன. தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் வசமிருந்த இந்த தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சி தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

புதுப்பள்ளி இடைத்தேர்தல்; சாண்டி உம்மன் முன்னிலை

Published on 08/09/2023 | Edited on 08/09/2023

 

kerala puthupalli by-election Sandy Ooman lead

 

கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி (வயது 80) உடல் நலக்குறைவு காரணமாகப் பெங்களூருவில் கடந்த ஜூலை 18 ஆம் தேதி அதிகாலை 4.25 மணியளவில் காலமானார். கேரள மாநில மூத்த காங்கிரஸ் தலைவரான உம்மன் சாண்டி கடந்த 2004 முதல் 2006 ஆம் ஆண்டு வரையிலும், 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை என இருமுறை கேரள மாநில முதலமைச்சராகப் பதவி வகித்தவர்.

 

கேரளாவில் உள்ள கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளி சட்டமன்றத் தொகுதியில் 1970 முதல் 2021 வரை காங்கிரஸ் கட்சி சார்பாக 12 முறை வெற்றி பெற்றுத் தொடர்ந்து 52 ஆண்டுகளுக்கும் மேலாகச் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். இத்தனை ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த இந்தியாவின் ஒரே அரசியல் தலைவர் கேரளாவின் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி ஆவார்.

 

உம்மன் சாண்டியின் மறைவைத் தொடர்ந்து அவர் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து வந்த புதுப்பள்ளி சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த தொகுதிக்கு செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் உம்மன் சாண்டி மகன் சாண்டி உம்மன் போட்டியிட்டார். இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி பதிவான வாக்குகள் தற்போது இன்று எண்ணப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுப்பள்ளி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சாண்டி உம்மன் முன்னிலை வகித்து வருகிறார். அதே சமயம் பாஜக வேட்பாளர் லிஜின் லால், மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் ஜெய்க் தாமஸ் ஆகியோர் பின் தங்கியுள்ளனர்.