நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று, அக்கட்சியின் பொதுச் செயலாளரான ஹரீஷ் ராவத் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இன்று அதிகாரபூர்வமாக இதனை அவர் அறிவித்துள்ளார். ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக, தமது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார். மேலும் ஒரு கட்சியின் தேர்தல் தோல்விக்கு தனிநபர் ஒருவரை மட்டுமே பொறுப்பாக்க முடியாது என்றும் ஹரீஷ் ராவத் தெரிவித்துள்ளார். கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான இவர் திடீரென ராஜினாமா செய்தது கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.