காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று இரவு திடீரென பாங்காக் புறப்பட்டு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் 21-ம் தேதி மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான பிரச்சாரத்தில் தீவிரமாக காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். நட்சத்திர பேச்சாளர்களாக ராகுல் காந்தி இருக்கும் நிலையில், டெல்லியில் இருந்து நேற்று இரவு 08.00 மணிக்கு பாங்காக் செல்லும் விஸ்தாரா நிறுவனத்தின் விமானத்தில் ராகுல் காந்தி பாங்காக் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.