delhi

Advertisment

சிபிஐ இயக்குனர் மற்றும் சிபிஐ சிறபு இயக்குனர் ஆகிய இருவரின் அதிகார மோதல் அரசியலில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதையடுத்து காங்கிரஸ் இதை கடுமையாக விமர்சித்துள்ளது. ரஃபேல் முறைகேட்டை விசாரணை செய்ய வந்ததால்தான் இந்த பிரச்சனை என்று ராகுல் விமர்சித்துள்ளார்.

சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா கட்டாய விடுப்பில் செல்ல எடுக்கப்பட்ட நடவடிக்கையை கண்டித்து இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் உள்ள சிபிஐ அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் உள்ள சிபிஐ அலுவலகங்கள் முன்பு பாதுகாப்பிற்காக போலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் லோதி சாலை பகுதியில் சிபிஐ தலைமையகம் முன்பு காலை 11 மணிக்கு ராகுல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

டெல்லியில் நடக்கும் காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸும் கலந்துகொண்டு ஆதரவு தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.