Advertisment

காங்கிரஸ் தலைவர் ரேஸில் திக்விஜய் சிங்

 Congress President Digvijay Singh

Advertisment

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலுக்கான அறிவிப்பாணையை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் குழு தலைவர் வெளியிட்டிருந்தார். அதன்படி, போட்டி இருக்கும் பட்சத்தில் வரும் அக்டோபர் 17- ஆம் தேதி அன்று காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை காங்கிரஸ் கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வரும் அக்டோபர் 19- ஆம் தேதி அன்று காலை 10.00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலில் திக்விஜய் சிங் போட்டியிடுவதாகவும் இதற்காக நாளை வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முடியாது என அசோக் கெலாட் தெரிவித்திருந்த நிலையில் காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலில் போட்டியிட இருப்பதாக திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Election congress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe