congress p.chithambaram

அண்மையில் கரோனா பரிசோதனை மையங்களைத் திறந்து வைத்த பிரதமர் மோடி 'சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவால் நாட்டில் கரோனாபாதிப்புகுறைந்துள்ளது' எனத் தெரிவித்திருந்தார். அதேபோல் நேற்று மத்திய அரசு சார்பில் மூன்றாம் கட்ட தளர்வுகள் நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

இந்நிலையில் மோடி அரசிடம் திட்டமும் இல்லை தனது மேலாண்மையை தோல்வியடைந்ததுஎன்று ஒப்புக்கொள்ள பணிவும் இல்லை. திறமையானவர்களின் உதவியை நாட வேண்டும் என்ற அணுகுமுறையும் இல்லை என ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். தொலைத்தொடர்பு, விமானப் போக்குவரத்துத் துறைகளுக்குத் தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ள ப.சிதம்பரம் தொலைத்தொடர்பு, விமானப் போக்குவரத்து துறை குலைந்தால் நேரடி, மறைமுக வேலை வாய்ப்புகள் அழிந்து விடும் எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisment