காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ஏற்க ஏ.கே.அந்தோணி மறுப்பு!

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, இந்த முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது. மக்களவை தேர்தல் தோல்வி குறித்து ஆராய காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் கடந்த மாதம் 25 ஆம் தேதி கூடியது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார் ராகுல் காந்தி. இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு செயல் தலைவர்கள் இருவரை நியமிக்க காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் முடிவு செய்தது. தென்மாநிலங்களில் இருந்து செயல் தலைவர்கள் நியமிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.

CONGRESS WORKING PRESIDENT

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஏ.கே. அந்தோணி மற்றும் கர்நாடக மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர்களின் பெயர்கள் பரிசீலனை செய்ததாகவும், உடல் நலக்குறைபாடு காரணமாக செயல்தலைவர் பதவியை அந்தோணி ஏற்க மறுத்து விட்டார். அதே போல் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் தோல்வியை அடுத்து வேணுகோபால் செயல்தலைவர் பதவியை ஏற்க மறுத்து விட்டதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான குலாம்நபி ஆசாத், அகமது பட்டேல் ஆகியோர்களின் பெயர்கள் காங்கிரஸ் கட்சி தீவிரமாக பரிசீலனை செய்து வருவதாகவும், இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

AVOID AK ANTONY congress party K.C.VENUGOPAL WORKING PRESIDENT
இதையும் படியுங்கள்
Subscribe