இந்தியாவில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில், அவற்றால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் உயிரிழப்புகளும் அதிகமாகி வருகின்றன. அந்தவகையில் இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 1½ லட்சம் பேர் வரை விபத்தில் உயிரிழப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. இந்த விபத்துகளுக்கு பெரும்பாலும் போக்குவரத்து விதிமீறலே காரணம் என அறியப்படுகிறது.எனவே இந்த விபத்துகளை குறைக்கும் நோக்கில் மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு சமீபத்தில் திருத்தம் கொண்டு வந்தது. இந்த அபராதத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் வாகன உற்பத்தியும் முடங்கி உள்ளது. பல நிறுவனங்கள் தங்களின் தொழிற்சாலையைகளை குறிப்பிட்ட நாட்களுக்கு மூடியுள்ளனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக மத்திய அமைச்சர் நிர்மலா பேசும்போது, " உபர், ஓலா வாகனங்களை மக்கள் பயன்படுத்துவதால் தான் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது என்று கூறினார். மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேசும் போது, "வாகன ஓட்டிகள் பார்க்கிங் கட்டணத்துக்கு பயந்து பொதுமக்கள் புதிய வாகனங்களை வாங்க தயங்குகிறார்கள்" என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு சர்வே முடிவினை வெளியிட்டுள்ளது. அதில் வாகனங்கள் வைத்திருப்பது தொடர்பாக இளம் வயதினர் முதல் வயதானவர்கள் வரை அனைவரிடமும் ஒரு சர்வே எடுத்து அதன் முடிவினை வெளியிட்டுள்ளனர்.