ஊழலின் ஊற்றுக்கண்ணே காங்கிரஸ் கட்சிதான் - ரவிசங்கர் பிரசாத்

 Ravi Shankar Prasad

ஊழலின் ஊற்றுக்கண்கே காங்கிரஸ் கட்சிதான் என்று பாஜகவின் ரவிசங்கர் பிரசாத் ராகுல் காந்திக்கு பதில் கூறியுள்ளார்.

இந்திய ராணுவத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடியும், அனில் அம்பானியும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியுள்ளனர். இந்தியாவின் ஆன்மாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி துரோகம் இழைத்துவிட்டார். பிரதமர் நரேந்திர மோடியும், அனில் அம்பானியும் சேர்ந்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி சுருட்டியுள்ளனர்'' என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 Ravi Shankar Prasad

இந்தநிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், பிரதமர் மோடி மீது ராகுல் முன் வைத்துள்ள குற்றச்சாட்டு வருந்தத்தக்கது. இந்தியாவின் எதிரிகளுக்கு மட்டுமே ராகுல் உதவி செய்து வருகிறார். பாகிஸ்தான் மற்றும் சீனாவின் கைப்பாவையாக ராகுல் செயல்படுகிறார். ரபேல் விமான ஒப்பந்தங்களை வெளியிட்டால் இந்தியா எதிர்ப்பு நாடுகளுக்கு அது சாதகமாகும் என்றார்.

modi rahul Ravi Shankar Prasad
இதையும் படியுங்கள்
Subscribe