Advertisment

காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர்- சோனியா காந்தி இன்று ஆலோசனை!

congress party new president sonia gandhi discussion with senior leaders for today

Advertisment

அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்து அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கட்சியின் மூத்த தலைவர்களுடன் இன்று (19/12/2020) ஆலோசனை நடத்துகிறார்.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்களானமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கமல்நாத், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஆனந்த் சர்மா, குலாம்நபி ஆசாத், சசிதரூர், ஏ.கே.அந்தோணி மற்றும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக ராகுல் காந்தி மீண்டும் ஒரு மனதாக தேர்வு செய்யப்படுவார் என கூறப்படுகிறது.

meetings congress party sonia gandhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe