CONGRESS PARTY MEETING VIDEO CONFERENCING

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம், அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Advertisment

செயற்குழு கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தருண் கோகாய், அகமது பட்டேல் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் டாக்டர்.மன்மோகன்சிங், பிரியங்கா காந்தி, ப.சிதம்பரம், அசோக் கெலாட் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்துக்கொண்டனர்.

Advertisment

இந்த செயற்குழு கூட்டத்தில் புதிய காங்கிரஸ் தலைவர், பீகார் சட்டமன்ற தேர்தல் தோல்வி, காங்கிரஸ் கட்சியின் உட்கட்சித் தேர்தல், மூத்த தலைவர்களின் சர்ச்சை பேச்சுக்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த கூட்டத்திற்கு பின் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.