Skip to main content

"சோனியாவுக்கு எஸ்பிஜி பாதுகாப்பு நீக்கம்"- மக்களவையில் அமித்ஷா விளக்கம்!

Published on 27/11/2019 | Edited on 27/11/2019

சோனியா காந்தி குடும்பத்தினருக்கான பாதுகாப்பை மத்திய அரசு விலக்கவில்லை என்று மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கமளித்துள்ளார்.


மக்களவையில் 'சிறப்பு பாதுகாப்பு குழு' (SPECIAL PROTECTION GROUP) தொடர்பான சட்ட திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். மசோதா மீதான விவாதத்தில் பேசிய அமித்ஷா, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி குடும்பத்தினருக்கான பாதுகாப்பை மத்திய அரசு விலக்கவில்லை. சோனியா காந்தி குடும்பத்திற்கு உள்ள அச்சுறுத்தல் தொடர்பான மதிப்பீட்டின் பேரில் பாதுக்காப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

CONGRESS PARTY INTERIM PRESIDENT SONIA GANDHI SPG SECURITY AMITH SHAH LOK SABHA


முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி குடும்பத்தினர் மீது அரசுக்கு அக்கறை இல்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. பிரதமரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தற்போது பாதுகாப்பு நடவடிக்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். அதன் பிறகு சிறப்பு பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது. மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேறினர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கூட்டணி பேச்சுவார்த்தை; மாநில அளவிலான குழுவை அமைத்த பா.ஜ.க

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
BJP has formed a state level committee for Alliance Negotiations

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

அதே வேளையில், பல்வேறு கட்சிகள் தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதே சமயத்தில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க., நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டது. அதில், கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் அறிக்கை உருவாக்கவும், தேர்தல் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், அரசியல் கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த தமிழக பா.ஜ.கவில் மாநில அளவிலான குழு ஒன்றை அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக பா.ஜ.க தலைவர் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்ட அறிவிப்பில்,‘மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா ஆகியோர் அரசியல் கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த மாநில அளவிலான அமைக்கப்பட்டுள்ள குழுவில் இடம்பெற்றுள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மக்களவையில் இருந்து தி.மு.க. எம்.பி.க்கள் வெளிநடப்பு!

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
DMK MPs walk out from Lok Sabha

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான கடந்த 31 ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. இதனையடுத்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான கடந்த 1 ஆம் தேதி மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதே சமயம் இந்த கூட்டத் தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெறும் எனக் கூறப்பட்ட நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் நாடாளுமன்ற அமர்வு முக்கிய காரணங்களுக்காக மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதன்படி பிப்ரவரி 10 ஆம் தேதி, சனிக்கிழமையான இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமர்வுகள நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது.

இத்தகைய சூழலில் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் கடைசி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்றுடன் (10.02.2024) நிறைவடைய உள்ளது. வழக்கமாக சனிக்கிழமைகளில் நாடாளுமன்ற அலுவல்கள் நடக்காத நிலையில் இன்று நாடாளுமன்றக் கூட்டத்தொடர் கூடியுள்ளதால் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகாரித்துள்ளது. அதே சமயம் நாடாளுமன்றத்தில் அயோத்தி ராமர் கோயில் தொடர்பாக விவாதிக்கப்பட வாய்ப்பு எனவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையில் நாடாளுமன்ற பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இன்று அவைக்கு வர தலைமை கொறடா உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவில் ‘நாடாளுமன்றத்தில் முக்கிய அலுவல் இருப்பதால் கட்டாயம் அவைக்கு வர வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

DMK MPs walk out from Lok Sabha

இந்நிலையில் மக்களவையில், தமிழக மீனவர்கள் நலனில் மத்திய அரசு அக்கறை செலுத்தவில்லை என குற்றம் சாட்டியதுடன், தமிழக மீனவர்கள் கைது சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு மத்திய அரசு இன்னும் பதிலளிக்கவில்லை என தி.மு.க. எம்.பி.க்கள் குற்றம் சாட்டினர். நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர் குழு தலைவர் டி.ஆர். பாலு எம்.பி. இது குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என்றார். அதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா மறுப்பு தெரிவித்ததால் மக்களவையில் இருந்து தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். முன்னதாக கடந்த 28 நாட்களில் மட்டும் 88 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன் 12 படகுகள் சிறை பிடிக்கப்பட்டுள்ளன என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று தமிழக மழை வெள்ள பாதிப்பு குறித்து விவாதிக்க வேண்டும், தமிழகத்திற்கு புயல் மற்றும் வெள்ள நிவாரணம் வழங்காத விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும், வெள்ள பாதிப்பு நிவாரணத்தை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என தி.மு.க. சார்பில் மாநிலங்களவையில் ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதும் கவனிக்கத்தக்கது.