ADVERTISEMENT

சோனியாவின் உத்தரவு... பதவியை ராஜினாமா செய்த நவ்ஜோத் சித்து!   

10:23 AM Mar 16, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அண்மையில் நடந்து முடிந்த உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. குறிப்பாக, பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியிடம் ஆட்சியை இழந்தது. மற்ற நான்கு மாநிலங்களில் பா.ஜ.க.வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பகவந்த் மான் பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக இன்று பொறுப்பேற்க இருக்கிறார்.

போட்டியிட்ட மாநிலங்களில் எல்லாம் காங்கிரஸ் தோல்வி முகம் கண்ட நிலையில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம், டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கடந்த 13 ஆம் தேதி கூடியது. ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கான காரணம், நடப்பு அரசியல் சூழல், வரவிருக்கும் மற்ற மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் வரவிருக்கிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி விரும்பினால் இணைந்து போட்டியிட தயார் என்று கூறிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் கருத்து உள்ளிட்டவைக் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அதனைத்தொடர்ந்து கட்சியை மறுசீரமைக்க தேர்தலில் தோல்வியைச் சந்தித்துள்ள உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்களை கூண்டோடு ராஜினாமா செய்ய நேற்று சோனியா காந்தி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்த நிலையில் பஞ்சாப்பின் காங்கிரஸ் தலைவர் நவஜோத் சித்துவும் காங்கிரஸ் மாநில தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார். இதற்கான ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளார் சித்து.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT