டெல்லியில் ஆகஸ்ட் 5ஆம் தேதி காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட இருந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
விலைவாசி உயர்வு, வேலையின்மை போன்றவற்றை கண்டித்து காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டத்தை வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடத்தப் போவதாக அறிவித்திருந்தது. டெல்லியில் ஆகஸ்ட் 5ஆம் தேதி காங்கிரஸ் நடத்த திட்டமிட்டு இருந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருக்கும் நிலையில் காவல்துறை அனுமதி மறுத்தாலும் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 5ஆம் தேதி நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு பத்திரிகை அலுவலகம் இன்று அமலாக்கத்துறையால் சீல் வைக்கப்பட்டுள்ளது டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தகுந்தது.