Advertisment

இந்திய ஒற்றுமைப் பயணத்தில் துயரம்; எம்.பி மரணம்

Congress MP passed away on bharath jodo yatra

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி இந்திய ஒற்றுமைப் பயணத்தை குமரியில் துவங்கினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து இந்தப் பயணத்தை துவக்கி வைத்தார்.

Advertisment

இந்த ஒற்றுமைப் பயணம் தமிழகம், கேரளா, கர்நாடகம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், மராட்டியம், உத்தரப் பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களைக் கடந்து,இந்தஒற்றுமைப் பயணம் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் நடந்து வருகிறது. இதில் காங்கிரஸ் எம்.பி. சந்தோக் சிங் இன்று காலையில்கலந்து கொண்டார்.

Advertisment

இந்நிலையில் திடீரென அவரது உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து சந்தோக் சிங் ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தனது ட்விட்டர் பதிவில், காங்கிரஸ் எம்.பி. சந்தோக் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனத்தெரிவித்துள்ளார். தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே சந்தோக் சிங்கின் மறைவுக்கு இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe