மத்திய அரசின்வேளாண்சட்டங்களுக்கு எதிராகவிவசாயிகளின்போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட 16 எதிர்க்கட்சிகள்,பட்ஜெட்கூட்டத் தொடரின்தொடக்கநாளன்று குடியரசுத் தலைவர் ஆற்றியஉரையைப் புறக்கணித்தனர்.
இந்தநிலையில், நேற்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட்தாக்கல்செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் அமர்விற்கு,வேளாண்சட்டங்களுக்கு எதிராகக் கடந்த இரண்டு மாதமாக தர்ணாவில் ஈடுபட்டு வரும்,பஞ்சாப்காங்கிரஸ் எம்.பிக்கள்மூவர்வருகைதந்தனர். அவர்கள், வேளாண்சட்டங்களுக்கு எதிரானவாசகங்கள் பொறித்தகருப்புஉடை அணிந்திருந்தனர். மேலும் அந்த எம்.பிக்கள்நாடாளுமன்றத்தின் முன்பாகஇருக்கும்காந்தி சிலையின்முன்பு நின்று, வேளாண்சட்டங்களுக்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் ராகுல்காந்தியைச் சந்தித்தது, தாங்கள் நடத்தி வரும் தர்ணா போராட்டத்தைப் பற்றி தெரிவித்தனர்.
இந்த எம்.பிக்கள் மூவரும், வெளியில் கோஷங்களை எழுப்பினாலும், நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது எந்த கோஷங்களையும் எழுப்பாமல் அமைதி காத்தனர். இதுகுறித்து அவர்கள், பட்ஜெட்தாக்கல்என்பது அரசியலமைப்பு நடவடிக்கை என்பதால் அதற்குஇடையூறு ஏற்படுத்தவில்லை எனத் தெரிவித்தனர்.